/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி. பள்ளி மாணவர்கள் சாதனை; கலெக்டர் பாராட்டு
/
ஏ.கே.டி. பள்ளி மாணவர்கள் சாதனை; கலெக்டர் பாராட்டு
ADDED : அக் 08, 2025 12:10 AM

கள்ளக்குறிச்சி; என்.டி.ஏ., தேர்வில் சாதனை படைத்த ஏ.கே.டி., பள்ளி மாணவர்களை கலெக்டர் பராட்டினார்.
இந்திய ராணுவம், கடற்படை, வான்படை ஆகியவற்றில் உயர் அதிகாரிகளாக உருவாக விரும்பும் மாணவர்களுக்காக யு.பி.எஸ்.சி., ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு அகாடமி (என்.டி.ஏ.,) தேர்வு நடத்துகிறது.
இவ்வாண்டு நடந்த தேர்வில் ஏ.கே.டி பள்ளி ராணுவ சேர்க்கை ஆயத்தப் பிரிவான டி.எஸ்.பி.ஏ.,யில் மாணவர்கள் சிறப்பு பயிற்சி பெற்று தேர்வில் பங்கேற்றனர்.
அதில் சென்னையை சேர்ந்த யுகேந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மொகித்ஜாக்ரா ஆகியோர் தேர்வாகி சாதனை படைத்து ஏ.கே.டி., பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து என்.டி.ஏ., தேர்வில், தேர்வாகிய சாதனை படைத்த மாணவர்கள் கலெக்டரை சந்தித்தனர்.
கலெக்டர் பிரசாந்த் மாணவர்கள் இருவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது பள்ளியின் டி.எஸ்.பி.ஏ. இயக்குனர் ஜெயமுருகன் உடனிருந்தார்.