/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரயில் மீது ஏறிய நபர்; மின்சாரம் தாக்கி பலி
/
ரயில் மீது ஏறிய நபர்; மின்சாரம் தாக்கி பலி
ADDED : அக் 08, 2025 12:10 AM
திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது ஏறிய அடையாளம் தெரியாத வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
உளுந்துார்பேட்டை ரயில் நிலையத்தில் டேங்கர் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் டேங்கர் ரயிலின் மேல் ஏறினார்.
அப்போது ரயில் மேல் சென்ற உயர்மின் அழுத்த கம்பி மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலே வாலிபர் உயிரிழந்தார்.
தகவலின்பேரில் விருதாச்சலம் ரயில்வே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் யார், எதற்காக ரயில் மீது ஏறினார் என விசாரித்து வருகின்றனர்