/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் வேண்டுகோள்
/
பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் வேண்டுகோள்
ADDED : அக் 25, 2025 07:54 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி மற்றும் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
நடப்பாண்டு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சம்பா நெல், உளுந்து பயிருக்கு நவம்பர் 15ம் தேதி வரையிலும், மக்காச்சோளம், பருத்தி- பயிருக்கு 31ம் தேதி வரையிலும் பயிர் காப்பீடு செய்யலாம்.
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு 538 ரூபாய், மக்காச்சோளத்திற்கு 300 ரூபாய், பருத்திக்கு 511 ரூபாய், உளுந்துக்கு 252 ரூபாய் காப்பீட்டு தொகையாக செலுத்த வேண்டும்.
விவசாயிகள் நடப்பு பருவத்திற்கான அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன், பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு தொகை செலுத்தி பதிவு செய்யலாம்.
பதிவு செய்யும் போது பெயர், முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விபரங்களை சரியாக கவனித்து பதிவு செய்து கொள்ளவும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

