UPDATED : அக் 10, 2026 06:42 PM
ADDED : அக் 10, 2026 06:17 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, பழங்கூர் கிராமத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள கரும்பு வயலை பார்வையிட்டார். தொடர்ந்து வேங்கூரில் தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில் அமைக்கப்பட்ட மீன் பண்ணை குட்டையினை பார்வையிட்டார்.
திருக்கோவிலுார் நகராட்சியில் ஒருங்கிணைந்த கழிவுநீர் மற்றும் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திசை திருப்புதல் மற்றும் இடைமறித்தல் 'ஆண் சைட் சானிடேஷன்' பணிகளை ஆய்வு செய்ததுடன், பெரிய ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, துார்வாரும் பணியையும் பார்வையிட்டார்.
கீழையூர், தென்பெண்ணை ஆற்றில் உள்ள கபிலர் குன்றினை பார்வையிட்டு, அதன் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
வளர்ச்சி பணி திட்டங்களை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது திருக்கோவிலுார் சார் ஆட்சியர் கார்த்திக் ராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜோதிபாசு உட்பட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
