தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்


UPDATED : அக் 10, 2026 06:56 PM

ADDED : அக் 10, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 06:56 PM ADDED : அக் 10, 2026 06:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தொடக்கப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,435 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர், இரவு நேர காப்பகங்கள், தொழிலாளர் குடியிருப்புகள், வீடற்ற விளிம்பு நிலை மக்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயது சான்று மற்றும் முகவரி சான்று நகலுடன், படிவம்-–6 பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுதவிர, இந்திய தேர்தல் ஆணைய இணைதயளம் voters.eci.gov.in மூலமாகவும் அல்லது வோட்டர் ெஹல்ப் ஆப் என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் பத்மஜா பார்வையிட்டு ஆய்வு செய்து, 18 வயது பூர்த்தியடைந்த இளம் தலைமுறை வாக்காளர்கள் இம்முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். வாணாபுரம் தாசில்தார் நளினி, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us