/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி சுழல் கேமரா பொருத்தும் பணி கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு

ADDED : மார் 16, 2024 11:51 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாகனங்களுக்கு, ஜி.பி.எஸ்., மற்றும் சுழல் கேமரா கருவி பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணைய வழிகாட்டுதல் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் பயன்படுத்துவதற்காக 36 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி நேற்று நடந்தது.
குறிப்பாக, பறக்கும் படை அலுவலர்களின் பயன்பாட்டிற்கென ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 வாகனங்கள் வீதம், 4 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தமாக 12 வாகனங்களில் சுழலும் கேமரா பொருத்தப்பட்டது.
இப்பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு, 'தேர்தல் அவசரம் பணி' என்ற ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டினார். அப்போது, வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், தனி தாசில்தார் (தேர்தல்) பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.