/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஆய்வு கூட்டம்
/
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஆய்வு கூட்டம்
ADDED : செப் 06, 2025 07:25 AM

கள்ளக்குறிச்சி; பசுமைத் தமிழ்நாடு இயக்கம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை பசுமைமிகு மாவட்டமாக மாற்ற மரக்கன்றுகளை கூடுதலாக நடுதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் மரங்களை புவியியல் குறியீடு செய்ய மரங்களின் எண்ணிக்கையை அதற்குரிய செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மரங்களின் புவிசார் புகைப்பட பதிவேற்றம் குறித்து விளக்கம் அளித்து, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.