/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டம் : 370 கோரிக்கை மனுக்கள்
/
கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டம் : 370 கோரிக்கை மனுக்கள்
கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டம் : 370 கோரிக்கை மனுக்கள்
கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டம் : 370 கோரிக்கை மனுக்கள்
ADDED : ஆக 18, 2025 11:34 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 370 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதில், வருவாய் துறை, வேளாண்மை துறை, ஊரகவளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர், சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித் தொகை உட்பட கோரிக்கைகள் தொடர்பாக 370 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்கள் அனுப்பி வைத்து உரிய தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுமதி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.