ADDED : அக் 02, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கரடிசித்துார் கிராமத்தில் காணாமல் போன கல்லுாரி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகள் துர்காஸ்ரீ, 19; சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். இவர், கடந்த 27ம் தேதி காலை வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

