ADDED : அக் 02, 2025 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த விரியூர் இமாகுலேட் மகளிர் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விரியூர் இமாகுலேட் மகளிர் கல்லுாரி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. டக்டர் சுகன்யா, கல்லுாரி முதல்வர் பினியன்மேலி, லில்லி மேரி, ஒருங்கிணைப்பாளர் சுந்தர், ஜெகன், சுகதார ஆய்வாளர்கள் பாசில் கார்த்திகேயன், செவிலியர் ஜெயா, ஆய்வக அலுவலர் செல்வம், ரோட்டரி சங்க தலைவர் மணிவண்ணன், முத்து கருப்பன், சுதாகர், மோகன், முனுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி மாணவிகள் 40 பேர் ரத்த தானம் வழங்கினர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை குழுவினர் ரத்தம் சேகரித்தனர். சரவணன் நன்றி கூறினார்.