/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சமூக வலைதளங்களை கண்காணிக்க பி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைப்பு
/
சமூக வலைதளங்களை கண்காணிக்க பி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைப்பு
சமூக வலைதளங்களை கண்காணிக்க பி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைப்பு
சமூக வலைதளங்களை கண்காணிக்க பி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைப்பு
ADDED : மார் 19, 2024 10:42 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டறிய, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி சமூக வலைதளங்களில் காழ்ப்புணர்ச்சி காரணமாக தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் பகிரப்படுகிறது. குறிப்பாக, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூலமாக பொய்யான செய்திகள் வேகமாக பரவுகிறது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் தொடர்பாக பகிரப்படும் வதந்திகளை கண்டறிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் தலைமையில், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, சமூகவலைதளங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை உள்ளடக்கிய குழுக்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தேர்தலையொட்டி ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருள் வழங்குதல், அவதுாறு செய்திகள், தேவையற்ற கருத்துகள் பகிரும் பட்சத்தில் அதை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
தொடர்ந்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தின் உண்மை தன்மை அறிய விசாரணை செய்யப்படும். அதில் பொய்யாக இருந்தால் சமூகவலைதளத்தில் இருந்து வதிந்தியான கருத்தை நீக்குவதுடன், அதை பகிர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

