/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு ஊழியர்களுக்கான போட்டிகள்: கலெக்டர் அழைப்பு
/
அரசு ஊழியர்களுக்கான போட்டிகள்: கலெக்டர் அழைப்பு
ADDED : மே 04, 2025 05:23 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நாளை நடக்கும் போட்டிகளில் பங்கேற்க, அரசு ஊழியர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா தமிழர் வார விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை, 5ம் தேதி மாலை 3:00 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசு ஊழியர்களுக்கு பாரதிதாசன் குறித்த கையெழுத்து, கவிதை வாசிப்பு, பேச்சு, வினாடி வினா, அலுவலக குறிப்பு வரைவு தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறுவோர்க்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.