சாலை வசதி தேவை
திருக்கோவிலுார் வடிவேல் நகர் பகுதிக்கு முறையான சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கிருஷ்ண பிரதாப் சிங், மணம்பூண்டி.
கோழி கழிவுகளால் துர்நாற்றம்
கள்ளக்குறிச்சி தென்கீரனுார் ஏரிக்கரை பகுதியில் மீன், கோழி கழிவுகள் கொட்டுவதால் பயங்கர துார்நாற்றம் ஏற்பட்டு, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
சினிவாசன், கள்ளக்குறிச்சி.
நிழற்குடை முன்பு புதர்செடிகள்
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் பயணிகள் நிழற்குடை முன்பு வளர்ந்துள்ள புகர் செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், உலங்காத்தான்.
சுகாதார சீர்கேடு
எலவனாசூர்கோட்டை பைபாஸ் சாலையோரம் உள்ள ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கவியரசன், எலவனாசூர்கோட்டை.
இருண்டு கிடக்கும் சாலை
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை - பெருவங்கூர் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
ராஜா, தண்டலை.