ADDED : அக் 05, 2025 11:12 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குற்ற வழக்கில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் காய்ந்து வீணாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்து, திருட்டு, வழிப்பறி, சாராயம், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் பிடிபடும் வாகனங்கள் அனைத்தும் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில குற்ற சம்பவங்களில் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து உரிமையாளர்கள் வாகனங்களை மீட்டு செல்வர்.
மற்ற வாகனங்கள் அனைத்தும் போலீசாரால் பொது ஏலம் விடப்படும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், கள்ளக்குறிச்சி போலீசாரால் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ள ஏராளமான பைக்குகள் வெயிலிலும், மழையிலும் வீணாகி வருகிறது. எனவே, பைக்குகளை பொது ஏலம் விடவும், பாதுகாப்பாக நிறுத்தி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.