/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாதை தொடர்பான தகராறு 10 பேர் மீது வழக்குப் பதிவு
/
பாதை தொடர்பான தகராறு 10 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : அக் 05, 2025 11:11 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வழிப்பாதை தொடர்பான தகராறில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சங்கராபுரம் அடுத்த விரியூரைச் சேர்ந்தவர் ஆனந்த ஆரோக்கியராஜ், 38; அதே ஊரைச் சேர்ந்தவர் ஜான்பீட்டர், 50; இருவருக்கும் அருகருகே நிலம் உள்ளது.
இருவருக்கும் இடையே நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், வழிப்பாதையில் இருந்த 20 தேக்கு மரத்தினை ஜான்பீட்டர் தனது ஆதரவாளர்கள் 10 பேருடன் சேர்ந்து சில தினங்களுக்கு முன் அத்துமீறி நுழைந்து வெட்டி எடுத்துச் சென்றுள்ளார்.
இது குறித்து கேட்ட ஆனந்த ஆரோக்கியராஜை, ஜான்பீட்டர் உட்பட 10 பேர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஆனந்த ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஜான்பீட்டர் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.