/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண் தாக்கு: தம்பதி மீது வழக்கு
/
பெண் தாக்கு: தம்பதி மீது வழக்கு
ADDED : அக் 05, 2025 11:11 PM
சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே பெண்ணை தாக்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
ச ங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு புதுகாலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி யசோதா, 60; எதிர் வீட்டைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி கவுரி, 39; இருவருக்கும் இடையே வாசலில் தண்ணீர் தெளிப்பது தொடர் பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. கடந்த 2ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து அறிந்த ய சோதா மகள் உஷா, 32; பிரச்னை தொடர்பாக கவுரியிடம் கேட்டுள்ளார். அப்போது சங்கர், அவரது மனைவி கவுரி ஆகியோர் சேர்ந்து யசோதா, உஷா ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் சங்கர், கவுரி ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.