/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் காங்., நடை பயணம்
/
சங்கராபுரத்தில் காங்., நடை பயணம்
ADDED : அக் 10, 2024 06:12 AM

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., கமிட்டி சார்பில் ராகுல் தலைமையில் நமது இந்தியா எழுச்சி நடை பயணம் சங்கராபுரத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் இதாயதுல்லா வரவேற்றார்.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட நடை பயணம் சங்கராபுரம் கடைவீதி, மும்முனை சந்திப்பில் நிறைவடைந்தது. முன்னதாக காங்., துணைத் தலைவர் மணி ரத்தினம் பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணியில் பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷாபீ, முன்னாள் மாவட்ட தலை வர் இளையராஜா, வக்கீல் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், வீரமுத்து, கண்ணன், செல்வராஜ், பிரபு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வக்கீல் பாஷா நன்றி கூறினார்.

