/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 14, 2025 01:01 AM

மூங்கில்துறைப்பட்டு : தஞ்சாவூரில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மூங்கில்துறைப்பட்டு மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தஞ்சாவூரில் மலேசியா, இலங்கை மற்றும் நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற, சர்வதேச கராத்தே போட்டி கடந்த வாரம் நடந்தது. இதில், மூங்கில்துறைப்பட்டு வீரம் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த 17 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 4 மாணவர்கள் முதலிடமும், 7 மாணவர்கள் 2வது இடமும், 6 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வீரம் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பயிற்சியாளர்கள் அண்ணாமலை, வின்சென்ட் ராஜ், விக்கி ஆகியோர் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.