/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணலுார்பேட்டை பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
/
மணலுார்பேட்டை பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
மணலுார்பேட்டை பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
மணலுார்பேட்டை பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஜன 20, 2025 11:45 PM

திருக்கோவிலூர்; மணலுார்பேட்டை பேரூராட்சிக்கு ரூ.1.24 கோடி மதிப்பில் புதிய அலுவலக கட்டுமான பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
மணலூர்பேட்டை பேரூராட்சிக்கு ரூ. 1.24 கோடி மதிப்பீட்டில், 294.14 சதுர மீட்டர் பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய புதிய அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் ரேவதி ஜெய்கணேஷ், துணை சேர்மன் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்த கொண்டனர்.