/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவக்கம்
/
தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவக்கம்
தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவக்கம்
தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவக்கம்
ADDED : நவ 12, 2025 10:18 PM

தியாகதுருகம்: தியாகதுருகம் புறவழி சாலை சந்திக்கும் இடத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கியதையடுத்து சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
சேலம் - உளுந்துார்பேட்டை இடையே 8 இடங்களில் புறவழி சாலைகள் அனைத்தும் இருவழி சாலையாக இருந்தது. தினமலர் செய்தி எதிரொலியால் கடந்த ஆண்டு புறவழி சாலைகள் அனைத்தும் ரூ. 260 கோடி மதிப்பில் நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. அதன் பின்னரும் முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலை சந்திக்கும் இடங்களில் விபத்து அடிக்கடி நிகழ்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து விபத்து அதிகம் நிகழும் 13 இடங்களை கண்டறிந்து ரூ. 262 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பனி கடந்தாண்டு துவங்கியது. இதன் ஒரு பகுதியாக தியாகதுருகம் நகரில் இருந்து நான்கு வழி சாலை சந்திக்கும் பிரிதிவிமங்கலம் பஸ் நிலையம் அருகே மேம்பாலம் கட்டுவதற்கான பணி துவக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த 6 மாதங்களாக சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் வாகன போக்குவரத்து சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதே இடத்தில் கடந்த 2021ம் ஆண்டு கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இங்கு அடிக்கடி விபத்து நிகழ்வது தொடர்கதையாக இருந்த நிலையில் தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது வாகன ஓட்டிகளை நிம்மதி அடைய செய்துள்ளது.

