நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: நாட்டார்மங்கலம் கிராமத்தில் மாயமான பள்ளி சிறுமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 9ம் தேதி சிறுமியின் தாயார் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு 8:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

