/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
/
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 09, 2025 12:31 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அனைத்து துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தனி, தனியாக கேட்டறியப்பட்டது.
இதில், வருவாய் துறை சார்பில் முதல்வரின் முகவரி திட்டம், நீங்கள் நலமா, பட்டா மாற்றம், கூட்டுறவுத்துறை சார்பில் விலையில்லா வேட்டி, சேலை வழங்குதல், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம், நியாய விலை கடை செயல்பாடு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் குடிநீர் விநியோகம், சாலை பணிகள், அம்ரூட் 2.0, தெரு விளக்குகள், ஊரக வளர்ச்சி துறை சார்பில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் கலைஞரின் கனவு இல்லம், வீடு பழுது பார்த்தல் திட்டம் உட்பட பல்வேறு திட்ட பணிகள் குறித்தும், அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்றடையும் முறை குறித்தும் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:
அரசின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கவும், வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திருக்கோவிலுார் சார் ஆட்சியர் ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி மற்றும் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

