/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுய உதவிக்குழுவினருக்கு நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு
/
சுய உதவிக்குழுவினருக்கு நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு
சுய உதவிக்குழுவினருக்கு நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு
சுய உதவிக்குழுவினருக்கு நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு
ADDED : ஜன 22, 2025 11:37 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பிற்கு வட்ட வழங்கல் அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் நேர்முக உதவியாளர் அனந்தசயனன் முன்னிலை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் அருண் கென்னடி, சுப்ரமணியன் ஆகியோர் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நுகர்வோர் சட்டங்களின் பயன்பாடு, வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்து, அதற்கான கையேடுகளை வழங்கினர். மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 130 பெண்கள் கலந்துகொண்டனர்.