/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுகர்வோர் சங்க பாதுகாப்பு கூட்டம்
/
நுகர்வோர் சங்க பாதுகாப்பு கூட்டம்
ADDED : மார் 30, 2025 11:28 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் சங்க பாதுகாப்பு கூட்டம் நடந்தது.
நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமை தாங்கினார். பொறியாளர் பிரபாகரன், நகரமைப்பு ஆய்வாளர் அமலின் சுகுணா, டிராபிக் இன்ஸ்பெக்டர் இளையராஜா முன்னிலை வகித்தனர். நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில், நகராட்சியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தெருக்களில் கார்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை நாள்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.
இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, ஆணையாளர் உறுதி அளித்தார். சங்க நிர்வாகிகள் அருண்கென்னடி, சுப்பிரமணியன், முருகன், விஜயசேகர், நாகராஜன், ஜானி மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.