/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுக்குழு கூட்டம்
/
நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 27, 2025 11:11 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பிரசார செயலாளர் கந்தனாதன், துணை தலைவர்கள் பன்னீர்செல்வம், சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், காமராஜ், நாராயணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிறுவனர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். தமிழகம் முழுவதும் அரசு ஆணைப்படி அனைத்து நிலை அரசு அதிகாரிகள் ஊழியர்கள் பணியின்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். திருநாவலுார் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.
அரசு கூட்டுறவு ரேஷன் கடையில் வழங்கும் உணவுப்பொருட்கள் தரமாகவும், பூச்சி, புழுக்கள் இல்லாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மகளிரணி பொறுப்பாளர் கவுதமி நன்றி கூறினார்.