/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் தொடர் மழை வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
/
சங்கராபுரத்தில் தொடர் மழை வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
சங்கராபுரத்தில் தொடர் மழை வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
சங்கராபுரத்தில் தொடர் மழை வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
ADDED : ஆக 12, 2025 02:36 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.
சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதில் சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமம் ஆறுமுகம் மகன் அண்ணாமலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதில் வீட்டிலிருந்த துணிகள், நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன. மழை நின்றவுடன் வீடுகளுக்கு புகுந்த மழைநீரை வெளியேற்றினர்.
சுவர் இடிந்து சேதம்: கொசப்பாடி கிராமத்தில் தங்கவேல் மகன் சக்தி, குபேந்திரன் மனைவி சுதா, ராமலிங்கம் மனைவி செந்தாமரை ஆகியோரது கூரை வீடுகளின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. பொருட்கள் மற்றும் உயிர் சேதம் ஏற்படவில்லை. தகவலறிந்த சங்கராபுரம் வருவாய் ஆய்வாளர் திவ்யா மற்றும் வி.ஏ.ஓ., ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.