sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதியம் கேட்டு பணி புறக்கணிப்பு

/

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதியம் கேட்டு பணி புறக்கணிப்பு

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதியம் கேட்டு பணி புறக்கணிப்பு

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதியம் கேட்டு பணி புறக்கணிப்பு


ADDED : அக் 30, 2024 05:45 AM

Google News

ADDED : அக் 30, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சம்பள பாக்கித்தொகை கேட்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் கிரீன் வாரியர்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 130 துப்புரவு பணியாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரியும், இனிவரும் காலங்களில் தாமதமின்றி சம்பளம் வழங்க வலியுறுத்தியும், 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நேற்று காலை 6:10 மணியளவில், பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சையத் காதர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் அனைவருக்கும் உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, துப்புரவு பணியாளர்கள் காலை 6:30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர்.






      Dinamalar
      Follow us