/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு கடன் சங்க விழிப்புணர்வு முகாம்
/
கூட்டுறவு கடன் சங்க விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 15, 2024 06:29 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் மின்னணு பரிவர்த்தனை நிதி சார் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வங்கியின் செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். விற்பனையாளர் வளர்மதி வரவேற்றார்.
திருக்கோவிலுார் மத்திய வங்கியின் மேலாளர் செல்வி, கடன் பெறும் முறைகள், வட்டி விகிதம், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள், இதில் விழிப்புடன் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
வங்கி வாடிக்கையாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முதுநிலை எழுத்தர் பாபு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். உதவி செயலாளர் நன்றி கூறினார்.

