ADDED : பிப் 05, 2025 06:31 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டம் சார்பில் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி் பேசுகையில், 'அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கவும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்களுக்கு கடனுதவி வழங்கவும் அதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் மகளிர் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்'என்றார்.
கூட்டத்தில், சான்று விதை உற்பத்தித் தொகுப்பு உள்ளிட்ட பண்ணை சார்ந்த வாழ்வாதாரத் திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்துவது தொடர்பாக வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை, தாட்கோ உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.