/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்கம்பி அறுந்து பசுமாடு பலி
/
மின்கம்பி அறுந்து பசுமாடு பலி
ADDED : டிச 01, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த காசிமணி, 60; விவசாயி.
இவர், தனது பசுமாட்டினை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்திருந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில் இப்பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின் கம்பி அறுந்து பசுமாட்டின் மீது விழுந்தது. இதனால் பசுமாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.
தகவலறிந்த மின் வாரிய ஊழியர்கள் அறுந்து விழுந்த மின் கம்பியை சீரமைத்தனர்.

