/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மீட்பு
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மீட்பு
ADDED : ஏப் 26, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
சங்கராபுரம், பொய்குணம் சாலையைச் சேர்ந்தவர் பகதுார்ஷா. இவர் வளர்த்து வரும் பசு மாடு எதிர்பாராதவிதமாக வீட்டின் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டியின் மேல் மூடி மீது நின்றபோது பாரம் தாங்காமல் தொட்டியின் மூடி உடைந்தது. இதில், மாடு கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

