/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை
ADDED : மார் 22, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கோ பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சின்னசேலம் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பங்குனி மாத முதல் வெள்ளியையொட்டி, கோ மாதாவிற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு, கோ மாதாவிற்கு மஞ்சள், குங்குமம் மற்றும் பல வண்ண மலர்களால் மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து விக்னேஸ்வர மற்றும் அஷ்டலஷ்மி பூஜைகளுக்கு பின் மகாதீபாரதனை நடந்தது. வழிபாடுகளை சர்மா பரத்குழுவினர் செய்தனர்.