sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிரைம் செய்திகள்...

/

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...


ADDED : ஜூலை 26, 2025 11:18 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணல் திருட்டு: வாலிபர் கைது மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாப்பாத்திமூலை பகுதியில் வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பதிவெண் இல்லாத டிராக்டர் டிப்பரில் மணல் கடத்திவந்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜவேலு, 21; என்பவரை கைது செய்து டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்தனர். தலைமறைவான வேலு என்பவரை தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் நகை, பணம் திருட்டு கள்ளக்குறிச்சி அடுத்த பாவந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி வெண்ணிலா, 48; இவர், கள்ளக்குறிச்சியில் அடகு வைத்த 12 கிராம் நகையை மீட்டு நகை மற்றும் 7,000 ரூபாயுடன் பாவந்துார் செல்ல கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பஸ் ஏறினார். ஏ.கே.டி., பஸ் நிறுத்தம் அருகே பையை திறந்து பார்த்தபோது, நகை, பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வெண்ணிலா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை சின்னசேலம் அடுத்த ராயப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன், 60; இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தி கடந்த 18 மாதங்களுக்கு முன் இறந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாயவன், கடந்த 21ம் தேதி களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழந்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று மாலை இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

சிறுமி திருமணம்: 5 பேர் மீது 'போக்சோ' கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசன் மகன் அருணாசலம், 27; இவர் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்தார். தற்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து தகவலறிந்த தியாகதுருகம் மகளிர் ஊர்நல அலுவலர் சாந்தி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அருணாசலம், 27; திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை இருசன், தாய் பழனியம்மாள், சிறுமியின் தந்தை, தாய் ஆகிய 5 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

குட்கா விற்றவர் கைது மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் மற்றும் போலீசார் நேற்று கடை வீதியில் கடைகளை சோதனை செய்தனர். அப்போது, துரைசாமி, 42; என்பவரது கடையில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் வைத்து விற்றது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பைக் மீது லாரி மோதி கொத்தனார் பலி திண்டிவனம் அப்பாவு தெருவைச் சேர்ந்தவர் பாவாடை மகன் மணிகண்டன், 32; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு, பைக்கில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சென்றார். மொளசூர் அய்யனார் கோவில் எதிரே, முன்னால் சென்ற லாரி, திடீரென வலது புறத்தில் இருந்து இடதுபுறமாக திரும்பியது. அப்போது பக்கவாட்டில் சென்ற மணிகண்டன் பைக், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டிராக்டர் மோதி மூதாட்டி பலி சின்னசேலம் அடுத்த பைத்தந்துறையைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி சின்னம்மாள், 60; இவர் நேற்று மாலை 5:00மணியளவில் தொட்டியம் - தென்செட்டியந்தல் சாலையை கடக்க முயன்றபோது, கிராவல் மண் ஏற்றி வந்த பதி வெண் இல்லாத டிராக்டர் மோதியதில் சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us