/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆன்லைன் மூலமாக ரூ.41 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
/
ஆன்லைன் மூலமாக ரூ.41 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைன் மூலமாக ரூ.41 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைன் மூலமாக ரூ.41 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 27, 2025 07:08 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்று சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பிய ஒருவர் ரூ.41 லட்சத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தி ஏமாற்றமடைந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் மரவள்ளி கிழங்கு இடைதரகர் ஒருவர்  சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து, கிளிக் செய்தார். அப்போது, 9629343051 என்ற எண்ணில் இருந்து அந்த நபருக்கு  வாட்ஸ்அப் செயலிக்கு லிங்க் வந்துள்ளது.
அதில், விபரங்களை பதிவு செய்யுமாறும், எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறைகளையும் மர்மநபர்கள் தெரிவித்துள்ள னர். இதை சரியாக செய்தால் அதற்குண்டான கமிஷன் தொகை வெப்சைட்டில் உள்ள கணக்கிற்கு வரும், அதை வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
மர்ம நபர்கள் கூறியவாறு செய்த அந்த நபர்  ரூ.200 பணம் கிடைத்துள்ளது. இதை நம்பிய பல்வேறு பணிகளை செய்த அவருக்கு  கமிஷன் தொகை கிடைக்கப்பெறவில்லை. இது குறித்து கேட்டதற்கு பணம் செலுத்தினால் கமிஷன் தொகை கிடைக்கும் என மர்மநபர்கள் தெரிவித்துள்ளனர். உடன் பொன்முடி பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்து 509 பணத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர்  இது குறித்து ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார்.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்  பதிந்து விசாரிக்கின்றனர்.

