/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விநாயகர் கோவில் கோபுரம் சேதம்
/
விநாயகர் கோவில் கோபுரம் சேதம்
ADDED : நவ 24, 2025 07:06 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மின்னல் தாக்கி விநாயகர் கோவில் கோபுரம் சேதமடைந்தது.
தியாகதுருகம் அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. அதிகாலை 2:00 மணிக்கு ஊரின் மையப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் கோபுர கலசத்தின் மீது மின்னல் தாக்கியது. அதனால் ஏற்பட்ட அதிர்வினால் கலசம் தூக்கி எறியப்பட்டு கோபுரம் விரிசல் விட்டு சேதமடைந்தது.
காலையில் கிராம மக்கள் சென்று பார்த்த போது கோபுரம் இடிந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த கோவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி வேலைகள் செய்து புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில் மின்னல் தாக்கி கோபுரம் சேதம் அடைந்ததால் பக்தர்களை கவலை அடையச் செய்துள்ளது.

