ADDED : நவ 24, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; முடியனுாரில் மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
வரஞ்சரம் அடுத்த முடியனுாரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது 14 வயது மகள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில் இயற்கை உபாதைக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.