UPDATED : அக் 22, 2026 04:47 PM
ADDED : அக் 22, 2026 04:44 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களை வெற்றிப்பயண திட்டத்தில் இணைத்திட வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய இணைத் தலைவர் பாரத் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் வேலு, பொருளாளர் மீனாட்சி, துணைச் செயலாளர் கொளஞ்சி, மாவட்ட குழு உறுப்பினர் சிவலிங்கம், ஒன்றிய தலைவர் கொளஞ்சி, ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், பழனிசாமி, கிளை நிர்வாகிகள் சாந்தி, ரேவதி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் வெற்றிப்பயண திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் பயணம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஒன்றிய பொருளாளர் சுதா நன்றி கூறினார்.
