ADDED : அக் 22, 2026 03:46 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் புத்து மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரகண்டநல்லுார் தரைப்பாலம் அருகே உள்ள பழமை வாய்ந்த புத்து மாரியம்மன் கோவில் இக்கோவிலில் இரண்டு உண்டியல்கள் உள்ளது.
இன்று (அக்.,22) காலையில் பார்த்தபோது இரண்டு உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து கோவில் தர்மகர்த்தா முருகன் அளித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
