/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஆர்ப்பாட்டம்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஆர்ப்பாட்டம்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஆர்ப்பாட்டம்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 29, 2024 06:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். பிரசார செயலாளர் கந்தநாதன், அமைப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
பொதுச் செயலாளர் செல்வராஜ் கோரிக்கை வலியுறுத்தி பேசினார். துணைத் தலைவர் சதிஷ்குமார், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மகளிரணி நிர்வாகிகள் கவுதமி, லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுதும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதைத் தடுக் கும் பொருட்டு, கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.