நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகே புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணை செயலாளர் அகத்தியன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் பாபு முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர்கள் ரகுநாத், முத்துராமலிங்கம், மாநில தொழிற்சங்க செயலாளர் மதியரசன் கண்டன உரையாற்றினர். சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சிறப்பு சட்டம் இயற்றுதல், துாத்துக்குடியில் இளைஞர் கவின் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.