
மூங்கில்துறைப்பட்டு; மேல்சிறுவலுார் கூட்ரோட்டில் பா.ஜ., அரசை கண்டித்து காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கினார். சங்கராபுரம் வட்டார தலைவர்கள் செல்வராஜ், பிரபு, மாவட்ட எஸ்.எஸ்டி., பிரிவு தலைவர் பெரியசாமி, சங்கராபுரம் நகர தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் வட்டார தலைவர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு பதவி விலக வேண்டும். சிறப்பு வாக்காளர் திருத்த சட்டத்தை நிறுத்த வேண்டும்என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இளைஞர் காங்., மாவட்ட தலைவர் தங்கத்தமிழன், மாநில பொதுச் செயலாளர் விஜயராஜன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் நாராயணன், கயூம்பாட்ஷா, நவாஸ்கான், முகமது பஷீர், சேகர், ஆடிட்டர் கோவிந்தராஜன், அண்ணாமலை, ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.