ADDED : ஆக 12, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வங்கி துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.
ராம்ஜி முன்னிலை வகித்தார். சின்னதுரை ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். வாரத்தில் 5 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கைகயை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முத்தையன், பாலமுருகன், சக்திவேல் உட்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
