UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:37 PM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த 6 மாணவர்களுக்கு நிரந்தர வைப்பு நிதிக்கான ஆணை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின், தாய் அல்லது தந்தை விபத்தின் காரணமாக இறந்துவிடுதல் அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, அரசு சார்பில் நிரந்த வைப்பு நிதிக்கான ஆணை வழங்கப்பட்டது. இதில், தமிழ்நாடு மின்விசை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், 6 மாணவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரத்திற்கான நிரந்தர வைப்பு நிதிக்கான ஆணையினை, கலெக்டர் பத்மஜா வழங்கினார். அப்போது சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
