நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த தன்வந்திரி ேஹாமத்தையொட்டி, கடந்த 1ம் தேதி காலை 5:00 மணிக்கு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, 9 :00 மணிக்கு தன்வந்திரி யாகமும், சுவாமிக்கு 27 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
சுவாமிக்கு சிறப்பு புஷ்பலங்காரம் செய்யப்பட்ட , மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில், மூலவர் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை பட்டாச்சியர் ஜெயக்குமார் செய்தார்.