UPDATED : நவ 04, 2026 12:02 PM
ADDED : நவ 04, 2026 11:57 AM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கான கோரிக்கைகள் குறித்த சிறப்பு முகாம் நடந்தது.
தமிழ்நாடு மாநில ஊர க வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் சுகந்தி தலைமை தாங்கினார்.
சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ராகேஷ் முகாமைத் தொடங்கி வைத்தார்.
முகாமில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
