/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'தினமலர் - பட்டம்' பொது அறிவை கற்றுத்தரும் போதி மரம்; மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேச்சு
/
'தினமலர் - பட்டம்' பொது அறிவை கற்றுத்தரும் போதி மரம்; மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேச்சு
'தினமலர் - பட்டம்' பொது அறிவை கற்றுத்தரும் போதி மரம்; மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேச்சு
'தினமலர் - பட்டம்' பொது அறிவை கற்றுத்தரும் போதி மரம்; மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேச்சு
ADDED : டிச 11, 2025 05:54 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளியில் மாணர்களுக்கு 'தினமலர்-பட்டம்' வினாடி வினா போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
'தினமலர்-பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்வி குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வு மூலம் பொது அறிவு சார்ந்த கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய 500 மாணவர்களில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, நேற்று வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
தாளாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முத்துக்குமரன் வரவேற்றார். மாணவர்களிடையே 3 சுற்றுகள் நடத்த வினாடி வினா போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்த 'பி' அணி முதலிடமும், 'ஏ' அணி இரண்டாமிடமும் பிடித்தனர். முதலிடம் பெற்ற மாணவிகள் பிரியரஞ்சனி, கனிஷ்காஸ்ரீ ஆகியோர்களுக்கு வெற்றி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ், இரண்டாமிடம் பெற்ற மாணவிகள் பிரீத்தி, ஜீவிதா ஆகியோர்களுக்கு வெற்றி பதக்கம், சான்றிதழை வழங்கி தாளாளர் மணிமாறன் பேசியதாவது;
தினமலர் நாளிதழ் செய்தி சேவையோடு கல்வி சேவையும் சிறப்பாக செய்து வருகிறது. மேற்படிப்பு குறித்த விளக்கங்களை தரும் வழிகாட்டி நிகழ்ச்சி, பொறியியல் துறையை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் கவுன்சிலிங்கில் சிறந்த பாடப்பிரிவு, கல்லுாரியை தேர்வு செய்வது குறித்த விளக்கங்களை அளிக்கும் உங்களால் முடியும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் என்ற நிகழ்ச்சி ஆகியன சிறந்த வழிகாட்டுதலாக உளளது.
நீட் தேர்வு குறித்த பயத்தை போக்கும் வகையில், மாதிரி நீட் தேர்வு தினமலர் சார்பாக நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. இதை தொடர்ந்து பொது அறிவை இளம் பருவத்திலேயே மாணவர்களுக்கு கற்றுத்தரும் போதி மரமாக பட்டம் இதழ் விளங்குகிறது.
பட்டம் இதழை படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற்று உயர் அதிகாரிகளாக பணியில் அமர முடியும் என்று தாளாளர் பேசினார். பொறுப்பாசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

