/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய தலைமுறையினருக்கு ஒளி விளக்காக திகழும் 'தினமலர்'
/
புதிய தலைமுறையினருக்கு ஒளி விளக்காக திகழும் 'தினமலர்'
புதிய தலைமுறையினருக்கு ஒளி விளக்காக திகழும் 'தினமலர்'
புதிய தலைமுறையினருக்கு ஒளி விளக்காக திகழும் 'தினமலர்'
ADDED : செப் 05, 2025 11:31 PM

கள்ளக்குறிச்சி: புதிய தலைமுறையினருக்கு ஒளி விளக்காக திகழும் 'தினமலர்' நாளிதழ் என கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., குழுமம்நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
உண்மைத்தன்மை, நடுநிலைமை ஆகியவை தினமலரின் அடையாளங்கள். தினமலர் நாளிதழ் வெளியிடும் ஒவ்வொரு செய்திக்கும், வாசகர்களை ஈர்க்கும் வகையில் சிந்தித்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனித்துவமான தலைப்புகள் அமைகின்றன. தலைப்பை பார்த்தவுடனே செய்தி உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் வாசகர்களுக்கு புரியுமாறு அமைவது தினமலரின் சிறப்பாகும். செய்தியின் நம்பகத்தன்மையை உயர்த்துவதோடு, தனித்துவமான வாசகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளது. அனைத்து தரப்பினரும் தினமலருடன் இணைந்து தொடர்ந்து வாசிப்பு பழக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆண்டு தோறும் ஏராளமான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், போட்டிகள், சிறப்பு வெளியீடுகள் ஆகியவை தமிழ் சமூகத்தின் பண்பாடு மற்றும் முன்னேற்றத்தைக் காத்து வளர்க்கும் விதத்தில் அமைகின்றன. எங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து, அவர்களின் அறிவையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துகிறது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய முன்னேற்றத்துக்கும் தினமலர் சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறது. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள், கல்வி தகவல்கள், தொழில் துவக்க வழிகாட்டுதல்கள் வெளியிட்டு புதிய தலைமுறைக்கு ஒளி விளக்காகத் திகழ்கிறது.
பயனுள்ள இணைப்புகள், சிறப்பு பக்கங்கள், வண்ணச் சிறப்பிதழ்கள் வாசகர்களின் அறிவுத் தாகத்தை தீர்க்கும் விதத்தில் அமைகின்றன. எத்தனை சமூக ஊடகங்கள் வந்தாலும், தினமலருக்கு நிகர் எதுவுமில்லை.
கடந்த 75 ஆண்டுகால சிறப்புப் பயணத்தில், நாங்களும் உங்களுடன் இணைந்து பயணித்தோம். எங்கள் வெற்றிகளைப் பொதுமக்களிடம் கொண்டு சென்றதற்காக, தினமலருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
75ம் ஆண்டு சிறப்புப் பயணத்துக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். உங்களின் எதிர்காலப் பயணம் மேலும் பல வெற்றிகளையும், சிறப்புகளையும் எட்டட்டும்.