/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பவள விழா காணும் தினமலருக்கு பாராட்டுகள்
/
பவள விழா காணும் தினமலருக்கு பாராட்டுகள்
ADDED : செப் 05, 2025 10:47 PM

சங்கராபுரம்; சங்கராபுரம் தமிழ்நாடு வணிகர் பேரவை, மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் கூறியதாவது:
பத்திரிக்கைத் துறையில் சிறப்பான முழுப்பரிமான வளர்ச்சியோடு, 75ம் ஆண்டு துவக்க விழாவைக் கண்டுள்ள தினமலர் நாளிதழ் மென்மேலும் உயர்வடைய வாழ்த்துகின்றோம்.
எல்லா மத செய்திகளையும் பாரபட்சம் இன்றி சிறப்பாக வெளியிடுவது, எல்.கே.ஜி., முதல் கல்லுாரி மாணவர்கள் வரை அவரவர்களுக்கு தேவையான கல்வி வழிகாட்டுதல்களை லாப நோக்கமின்றி ஒர் வேள்வியாக செய்து வருவது வரவேற்பிற்குரியது.
பெண்களுக்கான சிறப்பான செய்திகள், பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு கள் வழங்குதல் அறிவு வளர்ச்சி அடையும் வகையில் குறுக்கெழுத்து போட்டிகள், நமது பாரம்பரிய பண்பாடு வளரும் வகையில் கோலப்போட்டி, இந்துமத விழாக்களை ஓட்டிய போட்டிகள் நடத்துவது மற்ற பத்திரிக்கைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தினமலர் இதழக்கு உள்ளது.
வருடம் 365 நாட்களும் பத்திரிக்கை வெளியீடு, அரசியலில் ஓர் பக்கம் சாய்ந்து விடாமல் எந்தக் கட்சி தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுதல், சிறப்பாகச் செய்தால் பாராட்டுதல், மக்களின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதன் மூலம் உடனே தீர்வு காண வழிவகை செய்தல், வணிகம் சிறக்க வேண்டி கண்காட்சி நடத்துதல், பொது சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்கள் செய்கின்ற செயல்களை செய்தி வெளிட்டு சிறப்பித்தல் உள்ளிட்ட பல பாராட்டுகளை பெறுகிறது.
ஆகவே தன்னிகரற்ற சேவைகளை பத்திரிக்கை தர்மத்தோடு செய்து வரும் தினமலர் மென்மேலும் உயர்தோங்க நாங்கள் என்றும் துணை நிற்போம் என கூறினார்.