/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.எஸ்.எம்., கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
/
டி.எஸ்.எம்., கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 05, 2025 10:47 PM

கள்ளக்குறிச்சி; கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி தாளாளர் மனோகர்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். துணை முதல்வர் ராமு தொகுப்புரையாற்றினார்.
ஆசிரியர் தின விழாவையொட்டி பி.எட்., பயிலும் மாணவர்களுக்கு ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், அவர் எழுதிய புத்தகங்கள் குறித்த பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் தேவி, பிரபாகரன், சிவராமன், அர்ச்சனா மற்றும் பலர் பங்கேற்றனர். செல்வம் நன்றி கூறினார்.