/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வி சேவையில் அக்கறை செலுத்தும் 'தினமலர்'; ஏ.கே.டி., கல்வி நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்

ADDED : அக் 02, 2025 10:20 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில், தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழுடன் இணைந்து வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்திய ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தினமலரின் கல்விச் சேவையை பாராட்டுகின்றோம். குழந்தைகளின் கல்வி சேவையில் அக்கறை செலுத்தி, வரும் காலங்களில் கல்வியில் சிறகடித்து பறக்கும் வகையில் அ, ஆ., எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, இரண்டாவது ஆண்டாக எங்களுடன் இணைந்து நடத்துவது பெருமை அளிக்கிறது. எதிர்காலத்தில் நாட்டுக்கு பெருமை சேர்க்கப்போகும் மாணவர்களின் கல்விப் பயணம் எங்களிடமிருந்து துவங்குவது மகிழ்ச்சியாக உள்ளது.
35 ஆண்டுகால கல்வி சேவையில் நீட், ஐஐடி, தேசிய பாதுகாப்பு அகாடமி(என்டிஏ) உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை ஆரம்பம் முதலே வழங்கி வருகின்றோம்.
மாணவர்கள், தற்போது இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் அதிகாரிகளாக சேருவதற்கான தேசிய பாதுகாப்பு படை(என்டிஏ) பயிற்சி நுழைவு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக கடந்த அக்., 1ம் தேதி வெளியான என்டிஏ தேர்வு முடிவில் எங்கள் பள்ளியின் இரு மாணவர்கள் தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் கல்வி வழங்கி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் அவர்களைத் தயார்படுத்துவது, எதிர்கால வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான அடிப்படைத் திறன்களை வளர்த்தல், நன்கொடையில்லாமல் உயர்கல்வியில் இடம்பிடிக்கச் செய்வதே எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.